இயக்குனராகும் மனோஜ் பாரதிராஜா!

By Staff

Manoj with Nandhana
கம்பன் வீட்டு கட்டுத் தறி கவி பாட வருகிறது. இயக்குநர் பாரதிராஜாவின் வாரிசு மனோஜ் கே. பாரதி இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

பாரதிராஜாவின் வாரிசு என்பதால் மனோஜ் கே பாரதியும் இயக்குநர் ஆவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப அவரும் மணிரத்தினத்திடம் உதவியாளராக சில காலம் இருந்தார்.

ஆனால் திடுதிப்பென நடிக்க வந்து விட்டார் மனோஜ். தாஜ்மஹால் மூலம் நடிகரான மனோஜ், பெரிய லெவலுக்கு வர முடியவில்லை.

இடையில் படங்கள் சுத்தமாக இல்லாமல் போனதால், நடிப்பை விட்டு விட்டார். திருமணமாகி செட்டிலாகி விட்ட மனோஜ் இப்போது புத்தெழுச்சியுடன் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.

ஆர்யாவை ஹீரோவாக நடிக்குமாறு கேட்டிருக்கிறாராம் மனோஜ். ஹீரோயினாக பூர்ணாவை புக் செய்துள்ளனர். பத்மா மகன் வசனம் எழுதப் போகிறார். இவர், மனோஜ் நடித்த பல்லவன் படத்தின் இயக்குநர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முதல் படம் என்பதால் படு கவனமாக திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளாராம் மனோஜ். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X