'ஜில் ஜில்' சேலையில் 'திக் திக்' மும்தாஜ்!

By Sudha

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறார் கவர்ச்சிக் கன்னி மும்தாஜ்.

தனது கவர்ச்சிகரமான ஆட்டம் மற்றும் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த மும்தாஜ், கட்டிப்புடி பாட்டுக்குப் பிறகு ஏகப்பட்ட டிமாண்டுக்குரியவராக உயர்ந்தார். அதன் பிறகு அவர் இல்லாமல் ஒரு தமிழ்ப் படமும் வரவில்லை என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் நமீதாவின் எழுச்சிக்குப் பிறகு மும்தாஜின் மவுசு சரிந்து போனது. இதனால் தமிழ் சினிமாவில் மும்தாஜின் ஆதிக்கம் குறைந்தது. இடையில் தெலுங்கு,கன்னடம், மலையாளம் என ரவுண்டடித்தார். பின்னர் தமிழ் டிவி நடன நிகழ்ச்சிகளின் நடுவராக மாறினார்.

இடையில் வில்லியாகவும் நடித்துப் பார்த்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு அட்டகாசமான வேடத்தில் திக் திக் என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் மும்தாஜ். பாக்யராஜின் மகள் சரண்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியாக நடிக்கும் படம் இது.

இந்தப் படத்தில் மும்தாஜ் பெரும் பணக்காரப் பெண்ணாக, தனிமையில் வசிக்கும் பெண்ணாக வருகிறார். இது ஒரு திகில் படம். மும்தாஜுக்கு இதில் அருமையான கேரக்டராம். பெரிதாக பேசப்படக் கூடிய வகையில் இந்த கேரக்டரை உருவாக்கியுள்ளாராம் இயக்குநர் இகோர். இவர் கலாபக் காதலன் படத்தை இயக்கியவர். இவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ளார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த திக் திக், ரசிகர்கள் மத்தியில் மும்தாஜை மீண்டும் நெருக்கமாக கொண்டுசெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இகோர்.

படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் அழகாக புடவை கட்டி அம்சமாக வருகிறாராம் மும்தாஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X