சர்வதேச திரைப்பட விழாவில் பாண்டியராஜன் குறும் படம்!

பாண்டியராஜன் ஏற்கனவே மகன், இரு துளிகள் ஆகிய 2 குறும் படங்களை இயக்கினார். அந்த 2 குறும் படங்களும் சர்வதேச குழந்தைகள் படவிழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதையடுத்து பாண்டியராஜன் மேலும் ஒரு குறும் படத்தை இயக்கினார். அவரது மகன் ப்ரித்விராஜன் நடித்துள்ள அந்தப் படத்துக்கு அழகு என்ற தலைப்பிட்டுள்ளார்.
இந்த படம், லக்னோவில் நடைபெறும் சர்வதேச குழந்தைகள் பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து தயாரித்திருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
இந்த புதிய முயற்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் அங்கீகார்ததைத் தொடர்ந்து, மேலும் ஒரு குறும்படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார் பாண்டியராஜன்.
Comments
azhagu குறும்படம் திரைப்பட விழா பாண்டியராஜன் ப்ரித்விராஜன் லக்னௌ film festival lucknow pandiyarajan short film


Click it and Unblock the Notifications