நயனை மணக்க பெர்மிஷன் கேட்கிறார் பிரபுதேவா - ரமலத்

By Staff

Ramalath
நயனதாராவை மணந்து கொள்ள என்னிடமே அனுமதி கேட்டு நிற்கிறார் எனது கணவர் பிரபுதேவா என்று கூறியுள்ளார் அவரது மனைவி ரமலத்.

பிரபுதேவா - நயனதாராவின் கள்ளக்காதல், திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவர்களது காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனது இரு குழந்தைகளுடன் கலங்கிப் போய் நிற்கிறார். பிரபுதேவாவை திருத்த அவரது குடும்பத்தினர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போய் விட்டன.

தற்போது பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியிருப்பது பிரபுதேவா - நயனதாரா விவகாரம்.

முதலில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயனதாராவைக் குற்றம் சாட்டிப் பேசினார். எங்காவது பிரபுதேவாவுடன் இணைத்துப் பார்த்தால் அடிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து ரமலத் யார் என்னை அடிக்க என்று கோபப்பட்டார் நயனதாரா. இதற்குப் பதிலளித்த ரமலத், நயனதாராவின் இந்த திமிர் பேச்சுக்கு என் தமிழ்நாட்டு தாய்மார்களும், சகோதரிகளும், மாதர் சங்கங்களும் தக்க பதில் கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நயனதாராவைக் கல்யாணம் செய்து கொள்ள தன்னிடமே பெர்மிஷன் கேட்டு நிற்பதாக பிரபுதேவா குறித்து கண்ணீர் வடித்துள்ளார் ரமலத்.

எனது உயிரைப் பற்றிக் கூட அவருக்கு கவலை இல்லை. நயனதாராவை மணந்து கொள்ள நான் அனுமதி தர வேண்டும் என்று என்னிடமே கேட்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X