நயன்தாரா - பிரபுதேவா கள்ளக் காதலுக்கு பிரகாஷ் ராஜ் பகிரங்க ஆதரவு!!

By Chakra

Pony Varma, Nayanthara, Prabhu Deva and Prakash Raj
சென்னை: நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்குமிடையிலான கள்ளக் காதலுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

நயன்தாரா - பிரபுதேவா இடையே காதல் ஏற்பட காரணமாக இருந்ததே பிரகாஷ்ராஜ்தான் என்று கூறப்பட்டது. வில்லு படத்தில் இந்த இருவருக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர் பிரகாஷ்ராஜ்தானாம்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவி - குழந்தைகள் உள்ள நிலையில், நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக பிரபுதேவா அறிவித்தார்.

இந்த திருமணத்தை எதிர்த்து பிரபுதேவா மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னோடு சேர்ந்து வாழும்படி கணவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "பிரபுதேவாவும் நயன்தாராவும் பொருத்தமான ஜோடி. விருப்பப்பட்டு சில காரணங்களுக்காக அவர்கள் காதலர்களாகியுள்ளனர். இருவருமே எனக்கு சிறந்த நண்பர்கள். அவர்களுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறது.

பிரபுதேவா, நயன்தாரா காதலை நான் மதிக்கிறேன். எப்போதும் அவர்களை நான் ஆதரிப்பேன்," என்று கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜ் பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தனது மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்டு காதலி போனி வர்மாவை திருமணம் செய்தவர் பிரகாஷ் ராஜ். அவரது பாணியிலேயே பிரபு தேவாவும் இப்போது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

முதல்கட்டமாக, மனைவி ரம்லத் மற்றும் குழந்தைகளுக்கு அளித்து வந்த செலவுத் தொகையை நி்றுத்தியுள்ளார் (பிரகாஷ் ராஜும் இதே டெக்னிக்கைத்தான் கையாண்டாராம்!).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X