சிக்கலில் 'அக்கு' ஜோடி!

சமீபத்தில் திரைக்கு வந்த வித்தியாசமான படம் அக்கு. இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் அஜய். 26 வயதாகும் இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் வட பழனியைச் சேர்ந்த ஸ்ரீஜி. இவரது பூர்வீகம் கேரளா.
படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் படத்திலும், படத்திற்கு வெளியிலும் நெருங்கிப் பழகினர்.
இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். ஆனால் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
அக்கு படத்தோடு அஜய்க்கு வாய்ப்புகள் நின்று போய் விட்டன. இதனால் அவர் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஸ்ரீஜியை நோக்கி நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. இதனால் அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இது அஜய்க்குப் பிடிக்கவில்லை. தினசரி ஷூட்டிங், ஷூட்டிங் என்று இரவு நெடு நேரம் கழித்து அவர் வந்ததால் சந்தேகப்பட ஆரம்பித்தார். நடிக்கக் கூடாது என்று கூறினார். ஆனால் அதை ஸ்ரீஜி ஏற்கவில்லை. தொடர்ந்து நடிக்கப் போவதாக கூறினர்.
இந்த வாய்ச்சண்டை பின்னர் அடிதடியாகவும் மாறியதாக தெரிகிறது. இதையடுத்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அஜய் மீது புகார் கொடுத்தார் ஸ்ரீஜி. இதையடுத்து அஜய்யை போலீஸார் விசாரணைக்கு வரவழைத்தனர்.
இருவரையும் அமர வைத்து விசாரித்தபோது, அஜய்க்குப் புதிய படம் எதுவும் இல்லை. நானும் நடிக்காவிட்டால் குடும்பம் நடத்துவது எப்படி. எனவே நான் தொடர்ந்து நடிப்பேன். அதில் மாற்றம் இல்லை என்றார்.
பதிலுக்கு அஜய், ஸ்ரீஜி நடிக்கப் போகக் கூடாது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிடிவாதமாக கூறினார்.
இதையடுத்து வருகிற 28ம் தேதி விசாரணைக்கு வருமாறும், அதற்குள் சமரசமாக போக முயற்சியுங்கள் என்று போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











