நாயகன் ஆடியோ-ராஜாத்தி அம்மாள் ரிலீஸ்!

By Staff

Ritesh
ஜே.கே.ரித்தீஷ் நடித்துள்ள நாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கலந்து கொண்டு வெளியிட்டார்.

சத்யம் சினிமாஸில் நடந்த இந்த விழாவில், ஜே.கே.ரித்தீஷின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து விழாவை சிறப்பித்தனர்.

ரித்தீஷுக்கு பெரிய பெரிய கட் அவுட்கள் அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் நாயகன் பட ஸ்டில்கள் அச்சிடப்பட்ட மஞ்சள் நிற டீ சர்ட்டுகளுடன் பல இளைஞர்கள் அந்தப் பகுதியில் வலம் வந்தனர். இதனால் அந்த ஏரியாவே களேபரமாக காணப்பட்டது.

ராஜாத்தி அம்மாள் ஆடியோவை வெளியிட்டார். இயக்குநர் சீமான், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நாக் ரவி, சின்னி ஜெயந்த், கே.ஆர்.ஜி உள்ளிட்ட பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர்.

பின்னர் ரித்தீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், படத்தின் தயாரிப்பாளர் விஜயக்குமார் ரெட்டி, ஒவ்வொரு பாடலுக்கும் கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை செலவிட்டுள்ளார். பாடல்கள் பிரமாண்டமாக வந்துள்ளன. படத்தின் பட்ஜெட் ரூ. 8 கோடியாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் படம் உருவாகியுள்ளது.

தெலுங்கில் ஒன் என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. இசையமைப்பாளர் மரியா மனோகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ரேஞ்சுக்கு இவர் போவார் என்றார் ரித்தீஷ்.

ரித்தீஷ் அடுத்து சொந்தமாக ஒரு பிரமாண்டப் படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். படத்திற்குப் பெயர் தளபதியாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X