மகள் கல்யாணம்-திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைத்தார் ரஜினி

தனது இளைய மகள் செளந்தர்யாவின் கல்யாணத்தையொட்டி முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து அழைத்து வருகிறார் ரஜினிகாந்த். முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். வேளச்சேரியில் உள்ள தாய் மண் அறக்கட்டளை அலுவலகத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு திருமாவளவனை நேரில் சந்தித்து அழைப்பிதழை அளித்தார்.
இதேபோல டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களையும் ரஜினி சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Comments
actor rajinikanth செளந்தர்யா ரஜினி திருமண அழைப்பிதழ் திருமாவளவன் நடிகர் ரஜினிகாந்த் விடுதலைச் சிறுத்தைகள் marriage invitation soundarya rajini thirumavalavan vck leader


Click it and Unblock the Notifications