twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்ஸ் திரைப்பட விழா: ஈழத்துக் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

    By Staff
    |

    Ecluse at Cannes International Film Festival
    சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா.

    தற்போது 62-வது திரைப்பட விழா கேன்ஸ் நகரில் நடக்கிறது.

    இந்த ஆண்டு இந்த விழாவின் சிறப்பு அம்சம், ஈழத்துக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றிருப்பதுதான்.

    நதி என்ற குறும்படம் மூலம் இயக்குநரான மகேந்திரன் பாஸ்கர் இம்முறை இரு மேலும் இரு திரைப்படங்களை இயக்கி அவற்றை கேன்ஸ் விழாவுக்கு அனுப்பியுள்ளார்.

    இதில் 'வலி' என்ற திரைப்படம் குறும்படங்களுக்கான் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு உதயா இசையமைத்துள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காதல் கடிதம் படத்துக்கு இசையமைத்தவர், உதயா.

    மற்றொரு படம் 'ECLUSE' எனும் பெயரில் பாஸ்கர் இயக்கிய பிரெஞ்சு மொழி திரைப்படமாகும். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளவர் பிஎல் தேனப்பன். அட நம்ம ஊர் தேனப்பன்தாங்க. தனது ராஜலட்சுமி மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

    இந்தப் படம் கேன்ஸ் விழா போட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இது.

    இந்தப்படத்துக்கு இசையமைத்து நடித்துள்ளவரும் பாஸ்கரே. அவருடன் எல்மோடன் நஸிமா, அபிநயா கணேஷ் தம்பையா போன்றவர்களும் நடித்துள்ளனர். பிஆர்ஓ நிகில்.

    மே 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்த இந்த விழாவில் பிரான்சின் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களான இயக்குனர் பாஸ்கர், படத்தொகுப்பாளர் சங்கர், ஒளிப்பதிவாளர் கீதன் ஆகியோர் பங்கு பெற்றனர். இவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் பங்கேற்பை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில், ஈழத்தில் இலங்கை அரசு செய்து வரும் தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல், போன்றவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கவனத்தை ஈர்த்தனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X