சிவாஜியை மிஞ்சணும் ரோபோ!- இது ஷங்கர் சபதம்

By Staff

Rajini with Shankar
ரூ.140 கோடியில் உருவாகப் போகும் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படைப்பான ரோபோ, சூப்பர் ஸ்டார் ரஜினியின் முந்தைய படைப்பான சிவாஜியின் சாதனைகளை முறியடிக்கப் போகிறது. அந்த அளவு காலத்தை வென்ற படமாக ரோபோவை எடுக்கப் போகிறோம், என்கிறார் இயக்குநர் ஷங்கர்.

குசேலன் படத்தை முடித்துவிட்ட ரஜினி, முழு வீச்சில் இப்போது ரோபோ பணிகளில் இறங்கிவிட்டார். முதல்முறையாக உலகம் முழுவதிலும் ஆங்கில சப் டைட்டில்களுடன் வெளியாகப் போகும் படம் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கும் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி வருகிறார் இயக்குநர் ஷங்கர்.

ஏற்கெனவே சென்னை ஏவிஎம்மில் இரு போட்டோ செஷன்கள் முடிந்துவிட்ட நிலையில், மேலும் இரண்டு போட்டோ ஷூட்களுக்காக மும்பையில் முகாமிட்டுள்ளனர் ரஜினியும் ஷங்கரும். இதில் முதல்கட்ட ஷூட் முடிந்துவிட்டது. இதுவரை எடுத்துள்ள புகைப்படங்களை கிராபிக்ஸ் செய்து புதிய அசத்தல் ஸ்டில்களை உலகம் முழுக்க வெளியிடப் போகிறார்களாம்.

இந்த ஷூட்டுக்காக பிரபல டிசைனர் மனீஷ் மல்கோத்ரா, ஒப்பனைக் கலைஞர் பானு ஆகியோர் ஒரு மாதமாக ரஜினிக்கான உடைகள் மற்றும் விதவிதமான மேக்கப் டெக்னிக்குகளை தயார் செய்தனர்.

ஒரு ஹாலிவுட் படத்தை வெளியிடும் முன் என்ன மாதிரி விளம்பர உத்திகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அவை அத்தனையும் ரோபோவில் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே முதல்றையாக பிஆர்ஓ, விளம்பர மேலாளர் தவிர, படத்துக்கான புரமோஷனல் மேனேஜ்மென்ட் குழு ஒன்றையே ஷங்கர் அமர்த்தியுள்ளாராம். இந்தியா முழுவதிலும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் திரையிடப்பட வண்டும் என்பதால் இந்த ஏற்பாடு என்கிறார்கள், ஐங்கரன் நிறுவனத்தினர்.

இந்தப் படம் குறித்து வடநாட்டுப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஷங்கர் இப்படிக் கூறியிருக்கிறார்:

இந்திய சினிமாவில் ஏற்கெனவே அழுத்தமான முத்திரை பதித்த படம் சிவாஜி. அந்தப் படத்தின் சாதனையை முறியடிக்கும் விதத்தில் பல வகையிலும் மேம்பட்ட சர்வதேசப் படமாக ரோபோ வரும். இதுவரை எந்தப் படத்துக்காகவும் நான் இப்படிச் சொன்னதில்லை. ரோபோவை அந்த அளவு நான் நேசித்துச் செய்கிறேன். ரஜினி சார் கேரியரில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் படமாக ரோபோ வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம், என்கிறார்.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ரோபோ படப்பிடிப்பு துவங்கப் போகிறது.

கலங்குங்க ஷங்கர், ஹாலிவுட்டே அதிரணும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X