சூர்யா ஜோடி ஸ்ருதி?

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதிஹாஸன் என்கிறார்கள்.
கதையைக் கேட்ட ஸ்ருதியும் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், இதுவே தனது முதல் தமிழ்ப்படமாக இருக்கட்டும் என்று கூறியதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.
இப்போதைக்கு தெலுங்கில் கே பிரகாஷ் ராவ் இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ருதி, இதை முடித்த கையோடு சூர்யாவுடன் நடிக்க வருகிறார். அதேபோல தெலுங்கு - இந்தியில் உருவாகி வரும் ரக்த சரித்திராவில் பிஸியாக உள்ளார் சூர்யா. இந்தப் படத்தை ராம்கோபால் வர்மா எடுத்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே திட்டமிட்ட படம் இது.
இந்தப் படங்களுக்குப் பிறகே இருவரும் தாங்கள் இணைவதைப் பற்றி அறிவிக்கவிருக்கிறார்களாம்.
Comments
ஏஆர் முருகதாஸ் சூர்யா ரக்த சரித்திரா ஸ்ருதி pair raktha charithra shruthi hassan surya udayanithi stalin


Click it and Unblock the Notifications