சிம்பு தேவனின் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்!

இந்தப் படத்துக்கும் வழக்கமான அவரது ஸ்டைல் தலைப்புதான்... 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' - இதுதான் பெயர்.
இது மேற்கத்திய கௌபாய் பாணியிலான ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாம். ராகவா லாரன்ஸை நாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார். கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜெய்சங்கரின் கங்கா படம்தான் தமிழில் கடைசியாக வந்த கௌபாய் படம். இப்போதுதான் மீண்டும் ஒரு கௌபாய் படம் உருவாகிறது. ஆனால் இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட கௌபாய் படம்.
முறம் அகலத்துக்கு முதுகில் தொப்பி, இடுப்பின் இருபுறமும் தொங்கும் ரிவால்வர், தோல் சட்டைகள் என வித்தியாசமான கெட்டப்பில் தயாராகி வருகிறார் லாரன்ஸ்.
மார்ச் இறுதியில் படப்பிடிப்பைத் துவங்குகிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் அடர்ந்த காடுகளில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பாம். இப்போது கதாநாயகன் லாரன்ஸ் உள்பட எல்லா நட்சத்திரங்களும் குதிரைப் பயிற்சி, வாள் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி என தீவிர பயிற்சியில் உள்ளார்களாம்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சிம்புதேவன் இப்படிக் கூறுகிறார்:
'எனக்கு இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. ரூ.15 கோடி செலவில் எடுக்கிறோம். நிச்சயம் ஏமாற்றாது, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும்' என்றார்.
இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் பத்மப்ரியா மற்றொருவர் லட்சுமி ராய். முக்கிய வேடத்தில் நடிக்கிகிறார் நாசர்.
திருட்டுப் பயலே படத்தைத் தயாரித்த கல்பாத்தி எஸ் அகோரம்தான் இந்த 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்க'த்தின் தயாரிப்பாளர்.


Click it and Unblock the Notifications











