twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரை டூ தேனி-வழி: ஆண்டிபட்டி யூனிட்டின் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி

    By Sudha
    |

    Sarath and Malini
    யதார்த்த சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மதுரை டூ தேனி வழி: ஆண்டிபட்டி. இப் படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி'.

    அரசாங்கப் பணியில் சேர முயற்சிக்கும் இளைஞராக, படத்தின் நாயகனாக சரத் அறிமுகமாகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் ஒரு படத்தின் கதாநாயகனுக்கு மிக முக்கியத் தேவைகளாக இருக்கும் நடிப்பு,நடனம்,சண்டை ஆகிய பயிற்சிகளை தமிழ்சினிமாவில் அந்தந்த துறைகளில் பிரபலமாக இருப்பவர்களிடம் முழுமையாக கற்று தேர்ந்திருக்கிறார். அதன் பின்னரே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    அவருக்கு ஜோடியாக,படத்தின் நாயகியாக பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் என பல இந்திய பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்ற பெங்களூரை சேர்ந்த மாலினி அறிமுகமாகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், இயக்குனர் ரதிபாலா, இயக்குனர் ரவிபாரதி, செல்வம், மாலதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒருவார கால சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல், காமெடி கலந்து விறுவிறுப்பாக சொல்லி படத்துக்கு கதை, வசனத்தை எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ரவிபாரதி.

    மதுரை டூ தேனி வழி: ஆண்டிபட்டி படத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து பலருடைய பாராட்டுகளை பெற்ற எஸ்.பி.எஸ் குகன் இந்தப் படத்தில் HDSLR என்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்திற்கு சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவருடைய ஒளிப்பதிவில் இந்தப் படத்தில் வரும் காட்சியமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறும்.

    படத்திற்கு ஜே.வி. இசையமைக்க, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை உதய் கவனிக்கிறார், படத்தின் அனைத்து பாடல்களையும் இரா.தமிழ்செல்வன் எழுதியிருக்கிறார். நடனத்தை தினா மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை ஆக்ஷன் பிரகாஷ் அமைத்திருக்கிறார். கலையை முருகமணி,காவ்யா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து செய்திருக்கிறார்கள்.

    எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.ஜானகி சோணை முத்து, தங்கம் சிவதாஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

    படப்பிடிப்பு கொடைக்கானல்,வத்தலகுண்டு,மதுரை ஆகிய ஊர்களிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நடைபெற்று முடிந்துள்ளது.

    மதுரை டூ தேனி வழி: ஆண்டிபட்டி படத்தில் ஒருநாள் பேருந்து பயணத்தில் நடக்கும் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொன்ன இயக்குனர் ரதிபாலா இப்படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் அவர் இந்தப் படத்தில் ஒரு நடிகராகவும் அவதாரமெடுத்துள்ளார்.

    படத்தில் கண்ணாடி கோபி என்ற கதாபாத்திரத்தில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பது உறுதி.

    ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் சில நிமிடங்கள் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட HDSLR டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் முதல் முறையாக இந்தப் படத்தில் தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப்படம் தான் இந்தியாவின் முதல் HDSLR படம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

    கோடிக்கணக்கில் செலவு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த HDSLR தொழில்நுட்பம் ஒரு வரப்பிரசாதம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படங்களை தயாரிப்பதன் மூலம் படத்தின் தயாரிப்பாளர்கள் பல லட்சங்கள் ரூபாய் பணத்தை சேமிக்க முடியும்.

    படத்தில் நாயகனாக அறிமுகமாகும் சரத், ஒரு படத்தின் நாயகனுக்கு மிகமிக முக்கியத் தேவைகளாக இருக்கும் நடிப்பு,நடனம்,சண்டை ஆகிய பயிற்சிகளை தமிழ் சினிமாவில் அந்தந்த துறைகளில் பிரபலமாக இருப்பவர்களிடம் முழுமையாக கற்று தேர்ந்திருக்கிறார். அதன் பின்னரே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    இப்படத்துக்காக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் யாரும் சென்றிராத இடங்களை தேடிப்பிடித்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

    கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதிகளில் அட்டைப்பூச்சிகளின் கடிகளுக்கும், காட்டெறுமைகளின் துரத்தல்களுக்கும் நடுவில் படக்குழுவினர் தைரியமாக இருந்து படப்பிடிப்பை முடித்து வந்துள்ளனராம்.

    கதாநாயகி மாலினி படத்தில் வரும் ஒரு துரத்தல் காட்சியில் வேகமாக ஓடிப்போகும் போது பாறைகளில் வழுக்கி விழுந்து விட்டார், அதனால் அவருடைய கால் முட்டிகள்,கைகள் ஆகிய இடங்களில் சிராய்ப்புகளும், காயங்களும் ஏற்பட்டது, ஆனால் அவர் அதை அந்த காட்சியை எடுத்து முடிக்கும் வரை படக்குழுவினர் யாரிடமும் சொல்லவில்லை.

    காட்சி முடிந்த பின் படக்குழுவினர் எதேச்சையாக அதைப் பார்த்து கதாநாயகிக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள். நடிப்பு மீதான அவரின் இந்த ஈடுபாட்டை பார்த்து படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் உட்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டினர்.

    இயக்குனர் ரவிபாரதி படத்திற்கு கதை,வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமில்லாமல் படத்தின் நாயகி மாலினியின் அப்பாவாகவும் நடித்திருக்கிறார்.

    இந்தப் படத்தில் பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தில் நடிக்கவும் செய்துள்ளனராம்.

    காட்சியமைப்புகள் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக படத்தில் இடம்பெற்றுள்ள எல்லாக் காட்சிகளும் இரண்டு கேமராக்கள் கொண்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது.

    கதைக்கு தேவை ஏற்பட்டதால் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நிஜமான 'திருவிழா செட்" போடப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

    படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது, படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X