twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஹ்மான் முதல் தேசிய விருது பெற்ற கதை!

    By Staff
    |

    Balu Mahendra
    இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. இதுவரை வெளியில் சொல்லாத புதிய தகவல் ஒன்றைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் விழாவின் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பாலுமகேந்திரா.

    இன்றைக்கு ஆஸ்கர் விருதுகள் இரண்டினைப் பெற்று புகழ் ஏணியின் உச்சத்தில் நிற்கும் ஏஆர் ரஹ்மானுக்கு முதல் தேசிய விருது எப்படிக் கிடைத்தது என்பதை விளக்கும் தகவல் அது.

    "நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

    ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

    ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

    தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்...", என்றார் பாலு மகேந்திரா.

    இந்திர விழா படம் பற்றிய ஒரு கூடுதல் தகவல்:

    திருமணத்துக்குப் பின் தனது பழைய காதலி- கம்- முதலாளியால் வரும் செக்ஸ் டார்ச்சரை ஒரு இளம் கணவன் எப்படி எதிர்நோக்குகிறான் என்பதே இந்தப் படத்தின் கதை.

    மற்ற பாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை விடுங்கள்... அந்த செக்ஸ் டார்ச்சர் பார்ட்டியாக நடிப்பது யார் என்றுதானே கேட்கிறீர்கள்... ரசிகர்களை இனிய இம்சை செய்யும் நமீதாவேதான்!.

    கதை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கில்ல... சந்தேகமே வேண்டாம் ஆங்கிலப் படம் டிஸ்க்ளோசரின் தழுவல்தான் இந்த இந்திர விழா!.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X