யுஎஃப்எக்ஸ்: மேலும் ஒரு புதிய சேனல்!

By Chakra

Chennal UFX
பார்வையாளர்கள் இருக்கிறார்களோ இல்லையோ... சேனல்களுக்குப் பஞ்சமில்லை தென்னிந்தியாவில். குறிப்பாக தமிழில் சகட்டு மேனிக்கு சேனல்களை ஆரம்பித்துத் தள்ளுகிறார்கள்.

இதோ அந்த வரிசையில் இன்னும் ஒரு சேனல்.. யுஎஃப் எக்ஸ் (விளக்கம்: Unlimited Fun Xone!).

இந்த சேனல் தமிழ்நாட்டை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில்தான் காம்பியரிங் இருக்கும். ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழி பொழுதுபோக்குகளின் அவியலாக இருக்கும் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தமிழில் வெளியாகும் படங்களை தாராள விலையில் வாங்கி தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷம் தரப்போகிறார்களாம். வாங்காத படங்களுக்கும் விளம்பரங்களை ஒளிபரப்பி, ஓட வைக்க முயற்சிப்பதாக உறுதி கூறுகின்றனர்.

இந் நிறுவனத்தின் தலைவர் உஸ்மான் பயஸ் கூறுகையில், "எங்க சேனல் 16 வயசிலருந்து 30 வயசுக்குள்ள இருக்கிற இளசுங்களுக்கானது. அவர்களுக்கு சலிப்பே வராத வகையில், அடுத்த சானலுக்குத் தாவ ரிமோட்டைத் தேடாத வகையில் பொழுதுபோக்குகளைத் தரப் போகிறோம்.

பொதுவா டிவி ஆரம்பிக்கணும்னா, கட்சி பலம் வேணும்னு சொல்வாங்க. எங்களுக்கு அந்தக் கவலை இல்லை. காரணம் நாங்க இளைஞர்கள் கட்சி. அரசியல் கட்சிகளைவிட பலமானது இந்தக் கட்சி" என்றார்.

விவரமாத்தான் ஆரம்பிச்சிருக்காங்க போல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X