twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பத்துமே குத்தா'..?-வைரமுத்து வேதனை

    By Staff
    |

    Vairamuthu, Vidyasagar, Vijay, Prabhu, Bharath,Tirumurugan and Poorna
    பத்துப் பாட்டில் ஒரு குத்துப் பாட்டிருந்தால் பரவாயில்லை. பத்துமே குத்தாக இருப்பது நெஞ்சை வேதனை கொள்ளச் செய்கிறது என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் குறிப்பிட்டார்.

    மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரையும், எம்மகன் படத்தையும் இயக்கிய எம்.திருமுருகன் இப்போது, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    இதில் பரத் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். டத்தோ ரெனா.துரைசிங்கம் பிள்ளை தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத, வித்யாசாகர் இசையமைத்து இருக்கிறார்.

    இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் விஜய் வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக்கொண்டார்.

    விழாவில் வைரமுத்து பேசுகையில்,

    தமிழ் திரையுலகை விட்டு மெலடி எனப்படும் சுகமான கானங்கள் வெளியே போய்விடக் கூடாது. குத்து பாடல்கள் தேவைதான். அது பாகவதர் காலம் முதல் பரத் காலம் வரை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இசையில் ஒரு அங்கம்தான்.

    பத்து பாடல்களில் ஒரு குத்து பாட்டு இருக்கலாம். தப்பில்லை. பத்துமே குத்து என்றால், தாங்க முடியுமா... இலையில் ஊறுகாய் மாதிரிதான் அவை இருக்க வேண்டும். இலை முழுவதும் ஊறுகாயாக இருக்கக் கூடாது. மெலடி' பாடல்களுக்குத்தான் என்றைக்கும் மதிப்பு இருக்கும்.

    முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் பாடல்களில் விரசம் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

    இப்போது ஆங்கில படங்கள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பிரமாண்டங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப் படங்கள் அடித்தட்டு மக்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டதால் இன்றாக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

    அந்த பிரமாண்டத்தைத் தமிழில் பார்க்க முடியவில்லையே என்ற நினைப்பில் தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கும் அபாயம் உண்டாகியிருக்கிறது. எனவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் உருவாக வேண்டும் என்றார் வைரமுத்து.

    அவருக்கு முன் பேசிய நடிகர் விஜய், நான் ஏற்கெனவே பல மேடைகள்ல சொல்லியிருக்கேன். எனக்கு மெலடியை விட குத்துப் பாட்டுதான் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல ரெண்டு குத்துப்பாட்டு இருக்கு, ரெண்டுமே சூப்பர் என்றார்.

    அவருக்கு அடுத்துப் பேசிய வைரமுத்துவோ குத்துப் பாடல்களைக் குத்திக் கிழிக்க, அரங்கம் பரபரப்பானது. ஆனால் முகத்தில் எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் விஜய்.

    விழாவில் பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் வித்யாசாகர், டைரக்டர் திருமுருகன் தயாரிப்பாளர் டத்தோ ரெனா. துரைசிங்கம் பிள்ளை, ஐங்கரன் பிலிம்ஸ் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X