அக்கா மகளை மணக்கும் பாண்டிராஜ்!

பாக்யா அலுவலகத்தில் பணியாற்றி, பின் சேரன் போன்றவர்களிடம் சினிமா கற்று, சசிகுமார் மூலம் திரை வெளிச்சத்துக்கு வந்தவர் பாண்டிராஜ்.
முதல்படமே சர்வதேச லெவலுக்குப் பேசப்பட, இப்போதே கல்யாணத்தை முடித்துவிடும் வேலையில் இறங்கிவிட்டார்களாம் அலரது குடும்பத்தினர்.
மிக எளிமையாக தனது அக்கா மகள் வசந்தியைக் கரம் பிடிக்கிறாராம் பாண்டிராஜ்.
இன்னும் சில தினங்களில் அதுகுறித்த முறையான அறிவிப்பு வரும் என்று அவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, தனது அடுத்த பட வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். இதுவும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் படம்தானாம். ஜனவரியில் படத்தைத் துவங்கி கச்சிதமாக அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமாம்.
'உறவுகளின் வலிமையையும் மகத்துவத்தையும் சொல்லும் படம் இது. எங்க ஊர்லயே படமாக்கப் போறேன்' என்கிறார் அழுத்தமாக.


Click it and Unblock the Notifications











