சிங்கப்பூரில் 7-ஆம் அறிவு இசை வெளியீடு... சன் டிவியில் ஒளிபரப்பு!
சூர்யா - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 7-ஆம் அறிவு படத்தின் இசை வெளியீடு சிங்கப்பூரில் நடக்கிறது.
செப்டம்பர் 10-ம் தேதி பிரமாண்டமாக நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்புகிறது சன் டிவி.
ரஜினி நடித்த எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த அரங்கிலேயே ஏழாம் அறிவு பாடல்களையும் வெளியிடுகிறார்கள்.
படத்தின் வெளியீட்டு உரிமையையும் சன் பிக்சர்ஸ்தான் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சரித்திர பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications