டிராக்டர் ஓட்டி, வயலில் வேலை பார்த்து விவசாயியாக மாறிய அமிதாப்

தனது பிசியான பணக்கார வாழ்க்கைக்கு ஒரு நாள் பிரேக் விட்ட 68 வயது அமிதாப் பச்சன், லக்னோ மாவட்டம், முசாபர்நகர் கிராமத்தில் உள்ள தனது 6 ஹெக்டேர் நிலத்திற்கு ஒரு திடீர் விசிட் அடித்தார்.
அவருடன் மனைவி ஜெயாவும் வந்திருந்தார். நிலத்தை முதலில் சுற்றிப் பார்த்த அமிதாப் பின்னர் அங்கு நடந்து வந்த விதைப்புப் பணிகளைப் பார்த்து உற்சாகமடைந்து தானும் வயலில் இறங்கினார்.
டிராக்டரில் ஏறி அமர்ந்து வயலை சமப்படுத்தும் வேலையில் ஈடுபட்டார். பின்னர் விதை விதைத்தார்.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில், சமீபத்தில்தான் இந்த நிலத்தை வாங்கினோம். அதன் பின்னர் முதல் முறையாக இப்போதுதாந் இங்கு வருகிறேன். சொந்த நிலத்திற்கு வருவது உற்சாகமான மன நிலையைக் கொடுத்துள்ளது. இங்கு வந்த நிமிடங்கள் எனக்கு மறக்க முடியாதவை, அனுபவம் கொடுத்தவை என்று எழுதியுள்ளார்.
மொத்தம் மூன்று பகுதிகளாக இந்த நிலம் உள்ளது. இதில் அமிதாப் பச்சனுக்கு சொந்தமானது 2.5 ஹெக்டேராகும். ஜெயாவுக்கு சொந்தமானது 2.4 ஹெக்டேர். அபிஷேக் பச்சனின் பங்கு 1.2 ஹெக்டராகும்.
நேற்று வயலில் இறங்கி அமிதாப் பச்சன் வேலை பார்த்தபோது திடீரென மழை வந்து விட்டதால் சற்றே அப்செட்டாகி விட்டார். இருந்தாலும், மழையை அவர் பழிக்கவில்லை. மாறாக வரவேற்றார்.
சமீபத்தில்தான் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களை விவசாயிகளாக உ.பி. மாநில விதை வளர்ச்சிக் கழகத்தில் பதிவு செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோதுமை பயிரிட்டுள்ளனர். இதன் விளைச்சலை வருகிற மார்ச் மாதம் உ.பி. மாநில விதைப்புக் கழகத்திடம் அவர்கள் விற்பனை செய்வார்கள்.


Click it and Unblock the Notifications











