அல்வா தராததற்கு நன்றி-ஆர்யா

ஆர்யா நடித்த மதராசபட்டினம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து ஊர் ஊராகப் போய் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார்கள் படக் குழுவினர்.
நெல்லையில் உள்ள ராம் தியேட்டரில் மதராசபட்டினம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த கருத்துக்களை கேட்பதற்காகவும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் நடிகர் ஆர்யா அங்கு வந்தார். அவருடன் கதாநாயகி ஏமி ஜாக்சன், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர்கள் பாலாஜி, சதீஷ் ஆகியோரும் வந்தனர்.
அனைவருக்கும் செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைப் பார்த்து கதாநாயகியான இங்கிலாந்தின் ஏமி குஷியடைந்தார்.
பின்னர் மதியக் காட்சியின் இடைவேளையின்போது ஆர்யா, ஏமி ரசிகர்கள் முன் தோன்றி பேசினர்.
ஆர்யா பேசுகையில், நான் 10 படம் நடித்துள்ளேன். இது எனது 10-வது படம். மதராசபட்டினம் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளது.
இந்த படம் சுதந்திரத்துக்கு முந்தைய கதை. அதாவது 1946-ம் ஆண்டு வெள்ளைக்கார பெண் ஒரு கூலித்தொழிலாளியை காதலித்த கதை என்பதால் ரசிகர்கள் படத்தை ரசனையோடு பார்க்கிறார்கள்.
சண்டைக் காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டு உள்ளது.
கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து உள்ளோம். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் படத்தை பாராட்டி உள்ளனர்.
திருநெல்வேலி எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது. நீங்கள் எனக்கு அல்வா கொடுக்கவில்லை என்றார் ஆர்யா.


Click it and Unblock the Notifications











