ஷெர்லின் 'ஹிட்' - ஹேமா 'ஹீட்'!

By Staff

Sherlyn Chopra
பாலிவுட் கவர்ச்சி தேவதை ஷெர்லின் சோப்ரா உருவாக்கியுள்ள 'தர்த் இ ஷெர்லின்' என்ற இசை ஆல்பம் முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியை பெரும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது.

ஷெர்லின் சோப்ரா உருவாக்கியுள்ள படு சூடான இந்த வீடியோ ஆல்பத்தை ஹேமமாலினிக்கு காணிக்கை ஆக்குவதாக கூறியிருந்தார் ஷெர்லின்.

இதைக் கேட்டு டென்ஷனாகி விட்டார் ஹேமா. ஷெர்லின் வீடியோ குறித்து ஹேமா கூறுகையில், இது ரொம்ப ஹாட் வீடியோ. அடக் கடவுளே, எதற்காக என்னை இதுபோன்ற ஹாட்டான வீடியோ ஆல்பத்துடன் இணைத்துள்ளார் ஷெர்லின் என்று தெரியவில்லை.

எனது பெயரைப் பயன்படுத்தி தனது இமேஜை மாற்றிக் கொள்ள நினைக்கிறாரோ என்னவோ. அப்படி அவர் நினைத்தால் அதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன்.

நிர்வாணத்தை விரும்புகிறவர்கள் இந்த ஆல்பத்தை விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் நான் ஹேமமாலினி, அதை எந்த வகையிலும் மாற்ற முடியாது என்று பொறுமித் தள்ளி விட்டார் ஹேமா.

ஹேமாவின் இந்த கோபக் குமுறல் குறித்து ஷெர்லின் தரப்பில் அவருடைய பி.ஆர்.ஓ டேல் பக்வாகர் கூறுகையில், நான் ஹேமாஜியை மிகவும் மதிக்கிறேன். தனது ஆல்பத்தின் மூலம் நிர்வாணத்தைப் பரப்புகிறார் ஷெர்லின் என்று ஹேமாஜி கூறினால் அதை நான் ஏற்க மாட்டேன்.

இந்த வீடியோ ஆல்பத்தில் 19 வெட்டுக்களை சென்சார் போர்டு பரிந்துரைத்தது. அதே நேரத்தில், ஷெர்லின் போன்ற 'திவா' இமேஜ் கொண்டவர்களால் இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

மடோனாவிடம் போய் அல்கா யாக்னிக் போல இருங்கள் என்று யாராவது சொல்ல முடியுமா. இந்த வீடியோ ஆல்பத்தை ஹேமாஜிக்கு காணிக்கையாக்குவதாக ஷெர்லின் கூறியுள்ளார்.

1976ல் வெளியான 'தஸ் நம்ப்ரி' படத்தில் இடம் பெற்ற தர்த் பாடலுக்காக அப்போது என்ன வலியையெல்லாம் ஹேமாஜி தாங்கிக் கொண்டாரோ, சந்தித்தாரோ, அதே அளவிலான வலியைத்தான் இன்றைய நவீன உலகில் ஷெர்லின் போன்றோர் சந்திக்கின்றனர். இது உணர்ச்சிப்பூர்வமான, கொஞ்சம் செக்ஸியானதும் கூட என்று விளக்கியுள்ளார் டேல்.

ஷெர்லினின் முதல் ஆல்பம் அவுட்ரேஜியஸ். மிகப் பெறும் வெற்றியைப் பெற்ற அந்த ஆல்பத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் தர்த் இ ஷெர்லின் ஆல்பத்தை கடந்த மாதம்தான் ஷெர்லின் ரிலீஸ் செய்தார். அதுவும் சூப்பர் ஹிட்.

ஆல்பம் என்னவோ ஹிட் ஆகி விட்டது - ஆனால் ஹேமாதான் 'ஹீட்' ஆகி விட்டார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X