இது மதுரை 'மிளகா'..!

By Staff

Poonkod
மறுபடியும் ஒரு மதுரைக் கதை திரைப்படமாகிறது. படத்துக்குப் பெயர் மிளகா. ரவி மரியா இயக்குகிறார். நட்டு என்கிற நடராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மாயாண்டி குடும்பத்தார் புகழ் பூங்கொடி நாயகியாக நடிக்கிறார்.

ஆசை ஆசையாய் படத்தை இயக்கியவர் ரவி மரியா. அந்தப் படத்துக்குப் பின்னர் நடிப்புக்குத் தாவினார் மரியா. வில்லனாக, கேரக்டர் ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இப்போது மீண்டும் இயக்குநராகியிருக்கிறார் ரவி மரியா. மிளகா என்ற படத்தை இயக்கப் போகிறார்.

இந்தியில் பிரபல கேமராமேனாக வலம் வருபவரும், நாளை, சக்கரவியூகம் படங்களில் நாயகனாக நடித்தவருமான நட்டு என்கிற நடராஜ் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் அறிமுகமான பூங்கொடி நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர்கள் ஜெகன்னாத், சிங்கம்புலி, நந்தா பெரியசாமி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை மதுரை களத்தை பின்னணியாகக் கொண்டதாம். மதுரைக்கே உரிய அத்தனை சரக்குகளையும் சரிவிகத்தில் கலந்து கொடுக்கவுள்ளார் மரியா. அதேசமயம், இயல்பை மாறாத படமாக இது அமையும் என்றும் கூறுகிறார்.

மதுரை வட்டார வழக்கை முழுமையாக இப்படத்தில் பயன்படுத்தவுள்ளாராம் மரியா.

கடிக்க ரெடியா இருக்கோம்ணே, வெரசா வாங்க..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X