கை கோர்க்கும் அனில்- அமிதாப்!

By Staff

Amitabh Bachchan with Anil Ambani
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும், அமிதாப்பச்சனின் ஏபி கார்ப் நிறுவனமும் இணைந்து படத்தயாரிப்பில் குதிக்கின்றன.

இந்தக் கூட்டணி குறித்து ஏபி கார்ப் நிறுவன தலைமை செயலதிகாரி பி.ரமேஷ் கூறுகையில், 2008ம் ஆண்டின் இறுதியில், எங்களது கூட்டுத் தயாரிப்பு தொடங்குகிறது. நான்கு இயக்குநர்களை பரிசீலித்து வைத்துள்ளோம்.

இதுதவிர மேலும் சில திட்டங்களும் உள்ளது. விரைவில் அதுகுறித்து அறிவிப்போம் என்றார்.

ரிலையன்ஸ்- ஏபி கார்ப் நிறுவனங்களின் முதல் நான்கு படஙகளை இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர்கள் - சந்திரபிரகாஷ் திவிவேதி, ரோஹன் சிப்பி, சுஜாய் கோஷ், பால்கி ஆகியோர்.

இரு நிறுவனங்களும் படத்தயாரிப்பில் சம பங்குதாரர்களாக இருப்பார்களாம். நிதியுதவி உள்ளிட்ட அனைத்தையும் சமமாக பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

இப்படங்களில் பச்சன் குடும்பத்தினர் நடிப்பார்களா என்ற கேள்விக்கு ரமேஷ் பதிலளிக்கையில், திவிவேதி மற்றும் கோஷ் படங்களில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார். சிப்பி படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார். பால்கி படத்தில் இருவருமே நடிக்கவுள்ளனர் என்றார்.

ஏற்கனவே அமிதாப் பச்சன் முன்னொரு காலத்தில் தமிழில், உல்லாசம் என்ற படத்தைத் தயாரித்தார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X