சேதமான 'கந்தசாமி'!

By Staff

Vikram with Shreya
மெக்ஸிகோவில் நடந்த கந்தசாமி படப்பிடிப்பிலிருந்து திரும்பியுள்ள கந்தசாமி யூனிட், மொத்தம் உள்ள 120 பிலிம் ரோல்களில் 30 ரோல்கள் சேதமடைந்திருப்பதால் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.

ஹீரோ விக்ரமும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.

மெக்ஸிகோவில் உள்ள பல சிறப்பான இடங்களில் சமீபத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்தது கந்தசாமி யூனிட். வழக்கமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து விட்டு வரும்போது, பயன்படுத்தப்பட்ட பிலிம் ரோல்களைப் பாதுகாப்பாக, ஸ்கேனிங்குக்கு ஆளாகி விடாமல் கொண்டு வருவார்கள்.

ஆனால் கந்தசாமி விஷயத்தில் அந்த நடைமுறையில் கோளாறு ஏற்பட்டு விட்டது.

விமான நிலைய ஊழியர்கள்தான் பிலிம் ரோல்கள் அடங்கிய பெட்டிகளை தவறாக கையாண்டு சேதப்படுத்தி விட்டதாக இயக்குநர் சுசி கணேசனும், கேமராமேன் ஏகாவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இது யூனிட்டாரின் தவறுதான் என படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.

அஜாக்கிரதையால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

மெக்ஸிகோவில் போட்ட பணமும், எடுத்த முயற்சிகளும் வீணாகி விட்டதே என்று பெரும் அப்செட்டில் இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இருப்பினும், காட்சிகளின் முக்கியத்துவம் கருதி மறுபடியும் மெக்ஸிகோ சென்று அதே காட்சிளை மீண்டும் படம் பிடிக்குமாறு இயக்குநர் சுசி. கணேசனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவருக்கு வேண்டியவர்கள், வேண்டாம் விபரீதம் என்று அட்வைஸ் செய்யவே தற்போது பின்னி மில்லில் அந்தக் காட்சிகளை எடுக்கவுள்ளனராம். கிளைமேக்ஸையும் அங்கேயேதான் படம் பிடிக்கவுள்ளனராம்.

இனிமேலாவது கவனமா இருங்க சாமி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X