இரவு 9 மணிக்கு பிக் பாஸ்-ஐ ஒளிபரப்ப அனுமதி

ஆபாசம் அதிகமாக இருப்பதாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள சல்மான் கான் ஆங்கராக இருந்து நடத்தி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பலாம் என பாம்பே உயர்நீதிமன்றம் இடைக்கால அனுமதி அளித்துள்ளது.
ஆபாச அசைவுகள், வசனங்கள் உள்ளிட்டவை இடம் பெறாமல் பார்த்துக் கொள்வதாக நிகழ்ச்சி ஒளிபரப்பாளர்கள் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு இதை அனுமதிப்பதாக கோர்ட்டின் விடுமுறை கால பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ள சிலர் ஆபாசமாக பேசுவதாகவும், ஆபாச சைகைகளை செய்வதாகவும், இதைப் பார்க்கும் இளைஞர்கள், இளம் பெண்கள், சிறார்கள் மன நிலை பாதிக்கப்படுவதாக கூறி இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி கலர்ஸ் டிவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், இன்னொரு போட்டியாளருடன் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் இருந்ததாகவும், அதை ரகசியக் கேமரா பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.


Click it and Unblock the Notifications











