For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு!

    By Shankar
    |
    Sarath Kumar and Surya
    சென்னை: அடுத்த மாதம் தொடங்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான தமிழ் சினிமா அணி.. அதாவது சென்னை அணி மற்றும் அதற்கான லோகோ அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ம் தேதி தொடங்குகிறது.

    இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், நடிகர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ் (முதலில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்று பெயர் வைத்திருந்தனர்).

    இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தனு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    நேற்றைய சந்திப்பின்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

    விழாவில் பேசிய சரத்குமார், "ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி.

    மேலும் திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம்", என்றார்.

    English summary
    The Chennai Team and its logo has been announced for the forth coming star cricket CCL which commences from June 4th. Surya will be playing as the Icon player in Chennai team.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more