ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல் வாழ்க்கை கிடைக்கும் - சிரஞ்சீவி

By Staff

Rajinikanth with Chiranjeevi
தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் நண்பர் ரஜினிகாந்த் காலம் தாழ்த்தாமல் அரசியலுக்கு வர வேண்டும். இதுதான் அவருக்கு சரியான தருணம், என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், சூப்பர் ஸ்டார் ரஜினியை அரசியலுக்கு அழைத்தபடி உள்ளார் நடிகராக இருந்து ஆந்திராவில் பெரும் தலைவராக உருவெடுத்துள்ள சிரஞ்சீவி.

ரஜினி தனது 60 வது வயதில் அரசுயலுக்கு வருவதாக என்னிடம் கூறியுள்ளார் என சில மாதஙக்களுக்கு முன் ஒரு வடஇந்திய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். இப்போது ரஜினியை அரசியலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் சிரஞ்சீவி.

அவரது பிரஜா ராஜ்யம் கட்சியின் பிரச்சார கூட்டம் சித்தூரில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிரஞ்சீவி பேசும்போதும், ரஜினியைப் பற்றி தனது உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தினார்.

நல்ல மனிதரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், அதன் மூலம் மக்கள் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும். அதற்கு இதுவே சரியான நேரம். தமிழக மக்களுக்கு அப்படி ஒரு நல்ல வாழ்க்கைத் தர ரஜினிகாந்தால்தான் முடியும் என்றார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது: வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருப்பதியில் நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பிரஜா ராஜ்யம் கட்சி ஆட்சி அமைத்தவுடன் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 100 ரூபாய்க்கு 25 கிலோ அரிசி உட்பட மளிகை பொருட்கள் வழங்கப்படும்.

பக்கத்து மாநிலங்களிலும் நமது சிந்தனையை ஒத்த நண்பர்கள் பதவிக்கு வரும்போது அருமையான சூழ்நிலை உருவாகும். புதிய மாற்றங்கள் வரும், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X