பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்?

ஒரு நாள் தனுஷுக்கு போன்போட்ட பாரதிராஜா உடனே வரமுடியுமா என்று கேட்டாராம்.
அடுத்த சில நிமிடங்களில் ஜெமினி பார்ஸன் வளாகத்தில் ஆஜராகிவிட்டார் தனுஷ்.
அநவரிடம் பரஸ்பர நல விசாரிப்புகள் மற்றும் அடுத்தடுத்த படங்கள் பற்றியெல்லாம் பேசிய பாரதிராஜா, 'ஒரு கதை இருக்கு கேக்கறீங்களா தனுஷ்?" என்றாராம்.
சற்று ஷாக் ஆன தனுஷ், "அய்யோ சார்... உங்க படத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே பெரிய விஷயம். கதை கேட்கணும்னு அவசியம் இல்லை" என்றாராம் பணிவாக.
இருந்தாலும், தான் எவ்வளவு பெரிய இயக்குநர் என்ற ஈகோவெல்லாம் இல்லாமல், "பரவாயில்ல... கேளுங்க" என்று சொல்லிவிட்டு, சுருக்கமாக கதையைச் சொன்னாராம்.
தனுஷுக்கு கதை மட்டுமல்ல, பாரதிராஜா என்ற சிகரம் தொட்ட சாதனையாளர் தன்னை நடத்திய விதம் பிடித்துவிட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம்.
வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்ன தனுஷை உடனே வாழ்த்த ஆரம்பித்துவிட்டார்களாம்.
குறிப்பாக மாமனார், 'நல்ல சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க' என்றாராம்.


Click it and Unblock the Notifications











