twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அக்டோபர் 8-ல் எந்திரன்?

    By Sudha
    |

    Aishwarya Rai and Rajini
    எந்திரன் வெளியீடு மேலும் தள்ளிப் போகும் என்று தெரிகிறது. செப்டம்பரில் வெளியாகவிருந்த ரஜினியின் இந்த மெகா படம், அக்டோபர் 8-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    எந்திரன் இசை வெளியீட்டு விழாவில், 'அடுத்த மாதம் எந்திரன் வெளியாகும்' என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

    இந்தி ரோபோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், செப்டம்பரில் படம் வெளியாகும் என்று கூறினார்.

    ஆனால் இப்போது, படத்தின் ரிலீஸ் தேதி மேலும் இரு வாரங்களுக்கு தள்ளிப் போகக் கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

    "செப்டம்பர் 24-ம் தேதி படம் வெளியாகும் என்று முதலில் எங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அக்டோபர் 8-ம் தேதி என்று சொல்லியிருக்கிறார்கள்...," என்றார் ஒரு விநியோகஸ்தர்.

    ஒரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் நடந்து கொண்டுள்ளன. இன்னொரு பக்கம் எந்திரனின் தமிழக, உலக உரிமைக்கான விலையைப் பேசி முடிக்காமல் உள்ளது சன் பிக்சர்ஸ். எனவே இந்த இரண்டு முக்கிய வேலைகளும் நிறைவுக் கட்டத்துக்கு வரும்போதுதான் உறுதியான தேதியைச் சொல்ல முடியும் என்கிறது எந்திரன் யூனிட்.

    இயக்குநர் ஷங்கருக்கு ராசியான தேதி 8 என்பதால் அக்டோபர் 8- அன்றே ரிலீஸை வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அதில் சிறிதும் உண்மையில்லை என்றும், ரிலீஸ் தேதியை முடிவு செய்வது முழுக்க முழுக்க சன் பிக்சர்ஸ் நிர்வாகமே என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X