விசா மோசடியில் மோகன்பாபு - புளோரா போடும் குண்டு!!

By Staff

Flora
அமெரிக்க விசா மோசடி விவகாரத்தில் தெலுங்கு நடிகர் மோகன்பாபு தரப்புக்கு தொடர்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார் நடிகை புளோரா.

அமெரிக்க விசா மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்ற புளோரா சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த அவர், தான் மாட்டிக்கொண்டதன் பின்னணி குறித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது:

இந்த கலைநிகழ்ச்சியில் தெரியாமல் போய் மாட்டிக் கொண்டேன். அமெரிக்காவில் நடக்கும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு எனக்கு அழைப்பு வந்தது. பெரிய இடத்தைச் சேர்ந்த ஒருவர் அழைத்ததை நம்பி இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால் விசாரித்த பிறகுதான் தெரிந்த்தது அப்படி ஒரு நிகழ்ச்சியே நடக்கவில்லை என்று. போலியான ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி என்னை வம்பில் சிக்க வைத்துவிட்டார்கள்.

என்னை இந்த நிகழ்ச்சிக்குப் போகச் சொன்ன பெரிய மனிதரின் பி.ஏ.தான், அந்த இரு பெண்களையும் உதவிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதை நம்பித்தான் நானும் அவர்களுக்கு பாஸ்போர்ட் விசாவுக்கு ஏற்பாடு செய்தேன். என் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. இதை அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமும் எடுத்துச் சொன்னேன். அவரகள் கேட்கவில்லை. இப்போது விஷயம் கோர்ட்டில் இருக்கிறது. என் பக்கம் நியாயம் உள்ளது.

இந்தச் சம்பவம் மூலம் சக நடிகைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நம்பகமான ஆட்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிதானா என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே எதையும் ஒப்புக் கொள்ளுங்கள். விசா பெற முயற்சிக்குமுன் அனைத்து விஷயங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..." என்றார்.

இந்தச் சிக்கலில் நீங்கள் மாட்டிக்கொள்ளக் காரணம் மோகன்பாபுவின் உதவியாளரா என நிருபர்கள் கேட்டதற்கு, அதுபற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை என மழுப்பி விட்டார் ப்ளோரா.

படாதபாடு படும் 'நாடகம்'!:

இந்த நிலையில், விசா மோசடி விவகாரத்தில் ஒரு 'உச்ச' நடிகரின் உறவினர் ஒருவர் ஏடாகூடமாக சிக்கியுள்ளாராம். எந்நேரமும் இவர் கைதாகும் சூழல் உள்ளதால், அதைத் தடுக்க தனது உறவுக்கார நடிகர் மூலம் மேலிடத்தில் சொல்லி தப்பிக்க முயன்று வருகிறாராம்.

நாடகம், சினிமா, கல்வி என பரபரக்கும் அந்த பழைய காமெடி நடிகர் தனது சினிமா சொந்தம் மூலம் இதில் ஓரளவு ஜெயித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த 'காலிப் பெருங்காய டப்பா'வின் உண்மைகளையெல்லாம் அறிந்த பிறகு கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டாராம் அவரது உறவு நடிகர். தன்னைப் பார்க்க வந்த அவரிடம் 'ஒய், ஒய்' என்று கோபமாக பேசினாராம்.

சினிமாவிலும் பொதுவாழ்விலும் நான் நேர்மை நேர்மை என அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ள நீங்கள் இப்படி மோசடிப் பேர்வழிகளாயிருந்தால் எப்படி என விளாசித் தள்ளி விட்டாராம். இனி முகத்திலே விழிக்கவேண்டாம் என கூறி துரத்தி விட்டாராம்.

இருந்தாலும், மனைவியின் வற்புறுத்தலுக்கிணங்கி மேலிடத்தில் நடவடிக்கை வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம். இருந்தாலும் தமிழக மேலிடத்தின் சிபாரிசை அமெரிக்க அதிகாரிகள் ஏற்பார்களா என்று தெரியவில்லை. இதனால் தொடர்ந்து குழப்பத்தில் இருக்கிறாராம் காமெடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X