ஷாருக் நிகழ்ச்சியில் பெண் மயக்கம்

By Staff

Sharukh khan
துபாய்க்கு வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க முண்டியடித்தபோது இளம் பெண் ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷாருக்கான் துபாய் வந்துள்ளார். அங்கு இன்று மாலை டெம்ப்டேஷன் ரீலோடட் -2008 என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

இதற்காக நேற்று ஷாருக்கான் துபாய் வந்து சேர்ந்தார். ஷாருக்கான் வந்த தகவல் அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் அவர் தங்கியுள்ள ஹோட்டலில் குவிந்தனர். அப்போதுதான் பத்திரிக்கையாளர் கூட்டத்ைத முடித்து விட்டு வந்தார் ஷாருக்.

இதையடுத்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவும், அவருடன் கை குலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களில் பெண்கள்தான் அதிகம் பேர் இருந்தனர். பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவர்கள் ஷாருக்கிடம் செல்ல முயன்றனர்.

அப்போது ஒரு பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை மயக்கம் தெளிய வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ஷாருக் பேசுகையில், பணத்துக்காக நான் லைவ் ஷோக்களை செய்வதில்லை. இது எனது திறமைகளை வெளிக்காட்ட உதவும் பிளாட்பாரமாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் நான் ஒரு கட்டத்தை எட்டி விட்டேன். இனிமேல் எனக்குப் பணம் பெரிதில்லை.

எனது வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுத்தவர்கள் எனது ரசிகர்கள். இன்று நான் இருக்கும் நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்களுக்கு நன்றி ெதரிவிக்க இதுபோன்ற ஷோக்களை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

சமீபத்தில்தான் ரஸ் அல் கைமா பகுதியில், 2.18 பில்லியன் டாலர் மதிப்பிலான வீடு ஒன்றை ஷாருக் வாங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X