இன்னொருவனில் ரிஷா 'கபடியாட்டம்'!

அட்சயா மல்டி மீடியா கிரியேஷன்ஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ஆதித்யாவும், கதாநாயகியாக மனோஹாவும் அறிமுகமாகிறார்கள்.
இவர்களுடன் விசு, மணிவன்னன், எம்.எஸ்.பாஸ்கர், "காதல்" தண்டபாணி, அழகு, வின்சென்ட் ராளிணி, கிரேன் மனோகர் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம் என்கிற கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் படத்தின் இயக்குநர் புதுமுகம் எஸ்டி குணசேகரன்.
மார்ச் 6ம் தேதி திரைக்குவரும் இப்படத்தின் ஹைலைட் ஒரு குத்துப் பாடலாம். இந்தப்பாட்டுக்கு கவர்ச்சி நடிகை ரிஷா ஆடியுள்ள விதத்தைப் பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்கள், 'இந்த ஒரு பாட்டுக்காகவே படம் பிச்சிக்கிட்டுப் போகும் மக்கா' என சிலாகிக்கிறார்களாம்.
கடைவீதிக்கு வரத்தானே போகிறது இந்த கத்தரிக்காயும். அபபோது தெரிந்துவிடப் போகிறது..!


Click it and Unblock the Notifications











