கன்னட களவாணியிலும் ஓவியா
தமிழில் பெரும் வெற்றி பெற்ற களவாணி தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதிலும் களவாணி நாயகி ஓவியாவே நாயகியாக நடிக்கப் போகிறார்.
விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி சத்தம் போடாமல் பெரும் வெற்றி பெற்ற படம் களவாணி. தஞ்சைப் பக்கத்து பின்னணியுடன் வெளியான இப்படம் நல்ல கதைகளுக்கு என்றுமே வரவேற்பு உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்த படம்.
இப்படத்தின் மூலம் விமலுக்கு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தும், நாயகி ஓவியாவுக்கு சிறந்த அறிமுகமும் கிடைத்தது. இதையடுத்து தற்போது முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார் ஓவியா.
இந்த நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இதிலும் ஓவியாவே நாயகியாக நடிக்கப் போகிறார்.
மேலும் தமிழ் நடிகரான டேணியல் பாலாஜி இப்படத்தில் அண்ணன் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
வருகிற நாட்களில் மேலும் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து தமிழில் பெரிய ரவுண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம் ஓவியா.


Click it and Unblock the Notifications











