ஸ்ருதியும் 'கவிதை குண்டர்'களும்!

By Staff

Kavithai Gundar
'கவிதை குண்டர்' எனும் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டார் ஸ்ருதி ஹாசன். சர்வதேச தரத்தில், சர்வதேச அளவில் வெளியாகும் முதல் ஆல்பம் இது.

ஸ்டுடியோ 8 எனும் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழாவும், வெப்சைட் துவக்க விழாவும் நேற்று சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது.

எம்.சி.ஜாஸ், லோகா, பாடகி நேகா பாசின் (சத்தம் போடாதே படத்தில் இடம்பெறும் 'பேசுகிறேன்...' பாடல் பாடியவர்) ஆகியோரின் குரல்களில் உருவாக்கியுள்ள இந்த ஆல்பத்தில் உள்ள பாடல்களை, மேடையில் 'லைவ்'வாக பாடி அசத்தினார்கள்.

உலக அளவில் தமிழ் பாப் ஆல்பங்களுக்கு மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்று கூறிய எம்சி ஜாஸ், கவிதை குண்டர் பாடல்களை முழுமையாக அமெரிக்காவில் மிக்ஸிங் செய்துள்ளனர். அதனால் தரத்தில் ஆங்கில ஆல்பங்களுக்கு இணையாக வந்துள்ளது 'கவிதை குண்டர்'.

விழாவுக்கு வந்திருந்த கமல் ஹாசன் மகளும், இசையமைப்பாளர்-பாடகி-நடிகை என பன்முகத் திறமைகளைக் கொண்டவருமான ஸ்ருதி ஹாசன், பாடல்களை மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார்.

சன் நெட்வொர்க் தலைமை செயல் அலுவலர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, ஸ்டுடியோ 8-ன் இணையதளத்தைத் திறந்து வைத்தார்.

மே 1-ம் தேதி உலகம் முழுக்க விற்பனைக்கு வரும் இந்த ஆல்பத்தி்ல 13 பாடல்கள் உள்ளன. ஒரு ஆல்பம் வாங்குவோருக்கு ஒரு கவிதை குண்டர் டி ஷர்ட் மற்றும் பெல்ட் இலவசமாகத் தரப்படும் என அறிவித்தார் பாடகர் எம் சி ஜாஸ்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார் பிஆர்ஓ நிகில்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X