திரைப்படமாகும் மம்தா பானர்ஜி வாழ்க்கை : மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் ரிலீஸ்!

பிரபலத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்தகைய இயக்குநர் ஒருவர் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த இயக்குநரின் பெயர் வித்யுதா. என்ன தான் மம்தாவை பற்றி படம் எடுத்தாலும் அவர் பெயரை அப்படியே அந்த கதாபாத்திரத்திற்கு சூட்ட முடியாதல்லவா. அதனால் மம்தா கதாபாத்திரத்திற்கு மாயா பானர்ஜி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன் திரையிடப்படும் என்று வித்யுதா தெரிவித்துள்ளார்.
எந்த நடிகை மம்தாவாக நடிக்கவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More from Filmibeat
திரைப்படமாகும் மம்தா பானர்ஜி வாழ்க்கை திரைப்படம் மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி central minister mamata banerjee mamata banerjees life to be taken as a movie movie


Click it and Unblock the Notifications











