வெட்டோத்தி சுந்தரம் படத் தயாரிப்பாளர் மதிமுகவிலிருந்து விலகல்

சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மதிமுகவிலிருந்து விலகினார். தற்போது செந்தில்குமார் என்ற தயாரிப்பாளரும் மதிமுகவிலிருந்து விலகியுள்ளார்.
செந்தில்குமார் முன்பு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார், தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தைத் தயாரித்து வருகிறார். நடிகராகவும் இருந்தவர். தற்போது கடந்த 8 வருடமாக திருவண்ணாமலை நகர மதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தார். தற்போது கட்சியை விட்டு விலகி விட்டார்.
இதுதொடர்பாக அவர் மதிமகு பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், என்னை கட்சிக்கு அழைத்து வந்தவர் கலைப்புலி தாணு. அவரே மதிமுகவில் இருந்து விலகியபோது நான் மட்டும் எதற்கு அக்கட்சியில் இருக்க வேண்டும். எனவேதான் விலகினேன், வேறு எந்தக் காரணமும் இல்லை என்று கூறியுள்ளார் செந்தில்குமார்.
More from Filmibeat
சினிமா தம்பி வெட்டோத்தி சுந்தரம் தயாரிப்பாளர் செந்தில்குமார் மதிமுகவிலிருந்து திரைப்படத் தயாரிப்பாளர் விலகல் thambi vetothi sundaram movie producer senthil kumar


Click it and Unblock the Notifications











