புதுப் பொலிவுடன் 'மெகா லைவ் மியூசிக்'

சாட்டிலைட் சானல்களிடையே போட்டி அதிகரித்துள்ள நிலையில் நேயர்களை வசப்படுத்துவதற்காக புதுமையான ஐடியாக்களை மையமாக வைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.
இசையை மையமாக வைத்து பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. மெகா டிவியில் 'மெகா லைவ் ஷோ' என்ற இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இசை பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது புதிய அம்சங்களுடன் ஒளிபரப்பாகிறது.
புதுப்புது வித்தியாசமான தலைப்புகளில், சுவாரசியமான தகவல்களையும், கருத்துக்களையும் மையமாக வைத்து பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. வீடியோ ஜாக்கி வினோத்குமார் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை மெகா லைவ் ஷோ ஒளிபரப்பாகிறது.
Comments


Click it and Unblock the Notifications