மெகா டிவியின் 'மகா 3'!

By Staff

Mega Parvai - MEGA TV
மெகா டிவியில் மெகா பார்வை, அமுதகானம், மெகா டான்ஸ் 1234 என்ற மூன்று முத்தான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

காலத்தால் அழியாத, நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற தேனிசை பாடல்களின் இனிய தொகுப்பாக அமுத கானம் நிகழ்ச்சி மெகா டிவியில் தினமும் ஒருமணிநேரம் காலை 8.00 மணிகும், இரவு 11.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி, பழைய தமிழ் திரைப்பட பாடல்களின் தொகுப்புதான் என்றாலும், பாடல்களை மட்டுமே ஒளிபரப்பாமல், அந்த பாடல் பற்றி சுவையான செய்திகளையும், விளக்கங்களையும் தொகுத்து வழங்குகிறார் திரைப்பட இயக்குநர் திரு. ஆதவன்.

தேனிசைத் தென்றலாய் கருத்தொளிமிக்க அரிய பாடல்களின் இனிய தொகுப்பினை அட்டவனைப்படுத்தி அமுதகானமாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், ஏதேனும் ஒரு கருத்தினை மையப்படுத்தி, அந்த கருத்தோடு தொடர்புடைய சுவையான சம்பவங்களை சுவாரசியமாக தமிழ் நயத்துடன் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காண்போர் அனைவரையும் கவரும் விதமாக அமுத மழை பொழியும் அமுதகானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெகா டான்ஸ் 1.2.3.4....:

இளம் நேயர்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று மெகா டான்ஸ் 1234... என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் தங்களின் நடனத்திறமைகளை இதில் வெளிப்படுத்துகிறார்கள்.

இளைஞர்கள் தங்களது நடனத் திறமைகளை வெளிப்படுத்துவதோடு டான்ஸ் தொடர்பான சுவாரசியமான தகவல்களை ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைபடுத்தி வழங்கி வருகிறது மெகா டான்ஸ் 1234......

வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் நடன அறிவை வளர்க்கும் விதத்திலும், டான் வகைகளை அறிந்து கொள்ளும் விதத்திலும், இந்த மெகா டான்ஸ் 1234... நிகழ்ச்சி அமைந்துள்ளது. வெள்ளிதோறும் இரவு 8 மணி முதல் 9 மணி வரை மெகா டிவியில் ஒளிபரப்பு ஆகிறது.

மெகா பார்வை:

வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் தமிழ் திரைப்படங்களின் மாறுபட்ட அம்சங்களையும், கருத்துக்களையும் தெளிவான கண்ணோட்டத்தோடு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மெகா பார்வை.

வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ள புத்தம் புதிய திரைப்படங்கள் எந்த மாதிரியான நல்ல கருத்துக்களைச் சமுதாயத்திற்கு வழங்கியுள்ளன, என்பதைப் பற்றியும் எந்த மாதிரியான கதை அமைப்பைக் கொண்டு இருந்தால் அந்தப்படம் இன்னும் சிறப்பாக மக்களைச் சென்றடைந்திருக்கும் என்பதைத் தெளிவான கண்ணோட்டத்தோடு எளிமையாக தொகுத்து வழங்குகிறர் தொகுப்பாளர் சோனாலி.

இந்த நிகழ்ச்சியில் திரைக்குப் பின்னால் உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பணிகளை பாராட்டுவதோடு, திரையுலக வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் மெகா பார்வை நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் மாறுபட்ட அம்சங்களோடு உருவாக்கப்பட்டுள்ள மெகா பார்வை நிகழ்ச்சி வாரந்தோறும் ஞாயிறு கிழமைகளில் காலை 11.30 மணி முதல் 12.00 மணி வரை மெகா டிவியில் ஒளிபரப்பாகிறது. இதனை வை.த. மணிவாசகம் தயாரித்து வழங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X