விவாகரத்து ஆகாது- லலிதகுமாரி

By Staff

Lalitha Kumari
பிரகாஷ்ராஜுடன் விவாகரத்து ஆகாது-லலிதாகுமாரி நம்பிக்கை

எனக்கும் எனது கணவருக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை. அப்படி ஆகாது என்று நம்புகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவி லலிதகுமாரி கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி வில்லனும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ்ராஜ், மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

பிரகாஷ் ராஜ் சென்னைக்கு நடிக்க வந்த புதிதில், டிஸ்கோ சாந்தி வீட்டு மாடியில்தான் குடியிருந்தார். அப்போது அவருக்கும், சாந்தியின் தங்கையும், நடிகையுமான லலிதகுமாரிக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இத்தனை கால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் பிரகாஷ் ராஜ். இதனால்தான் அவருக்கும், லலிதகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும், தனது மேக்கப்வுமன் போனிவர்மாவை பிரகாஷ் ராஜ் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில்தான் விவாகரத்து முடிவுக்கு வந்தார் பிரகாஷ் ராஜ். தானும், தனது மனைவியும் பிரிந்தாலும் கூட, எங்களது குழந்தைகளுக்கு நாங்கள் அம்மா, அப்பாவாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரகாஷ் ராஜின் முடிவு குறித்து லலிதகுமாரி கூறுகையில், எனக்கும் எனது கணவருக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை. அப்படி எதுவும் ஆகாது என்று நம்புகிறேன். இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X