'காதலிக்க நேரமில்லை' பசுபதி!

'ராமன் தேடிய சீதை', 'வெடிகுண்டு முருகேசன்', 'தநா 07 அல 4777' என தொடர்ந்து வித்தியாசமான கதைகளை கையில் வைத்திருக்கும் பசுபதி, அடுத்து காலத்தால் மறக்க முடியாத சூப்பர் ஹிட் நகைச்சுவைப் படமான ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' ரீமேக்கில்.
இப்படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் ஸ்ரீதரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் மனோபாலா. பல மாதங்களாக ஆலோசித்து நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.
அதன்படி, முத்துராமன் கேரக்டரில் பசுபதி நடிக்கிறார். படத்தை கே.செல்வபாரதி இயக்குகிறார். இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
வித்தியாசமா படம் பண்றதெல்லாம் ஓகே... உங்கள் திரை வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுத்த பத்திரிகைகாரங்களை ஏகத்துக்கும் திட்டித் தீர்க்கிறீர்களாமே பசுபதி... ஏனிந்த வெறி?
Comments


Click it and Unblock the Notifications