செக் மோசடி நடிகை 'குண்டு' ஆர்த்திக்கு சம்மன்
புதுக்கோட்டை: செக் மோசடி வழக்கில் பிரபல டிவி மற்றும் சினிமா நடிகை ஆர்த்தி நேரில் ஆஜராகும்படி கூறி சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் டிவியின் சூப்பர் டென் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆர்த்தி. அதன் பின்னர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அருள், கிரி உள்ளிட்ட பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலீஸ்காரர் பெருமாள் என்பவர் கடந்த மார்ச் மாதம் ரூ 1.5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.
இந்த தொகைக்கான செக்கை பெருமாளிடம் நடிகை ஆர்த்தி கொடுத்துள்ளார். ஏப்ரல் 30 ம் தேதியன்று செக்கை வங்கியில் பெருமாள் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது.
இதையடுத்து அவர் ஆர்த்தி மீது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாஜிஸ்திரேட் பத்மநாபன் நடிகை ஆர்த்தியை செப்டம்பர் 22 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











