twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    40 சதவிகித பங்குகளை விற்கிறது பிரமிட் சாய்மிரா!

    By Staff
    |

    Pyramid Saimira logo
    சென்னை: பிரமிட் சாய்மிரா நிறுவனம் தனது திரைப்படத் தயாரிப்பு பிரிவின் 40 சதவிகித பங்குகளை கொல்கத்தாவைச் சேர்ந்த வேறொரு சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்கிறது.

    இதற்காக ரூ.100 கோடியை பிரமிட் சாய்மிராவில் முதலீடு செய்கிறது அந்த கொல்கத்தா நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட பிரமிட் சாய்மிரா தலைவர் பிஎஸ் சாமிநாதன் மறுத்துவிட்டார்.

    மேலும் தங்களது தொலைக்காட்சி தயாரிப்புப் பிரிவையும் அமெரிக்க திரையரங்கு பிரிவையும் முழுவதுமாக விற்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    நிறுவனத்தை மறுசீரமைத்து மீண்டும் முழு வேகத்தில் செயல்படவே இந்த நடவடிக்கைகள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் நிறுவன மேம்பாட்டுக்காக கடன் பத்திரம் வெளியிடுவது, சர்வதேச அளவில் பிணைப் பத்திர விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் மூலம் ரூ.500 கோடியைத் திரட்டவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களையும் செபிக்கு தெரிவித்துள்ளது பிரமிட் சாய்மிரா.

    திரட்டப்படும் புதிய நிதியைப் பயன்படுத்தி, தற்போது ஆரம்பித்து பாதியில் நிற்கும் 17 திரைப்படங்களையும் முடித்து திரைக்குக் கொண்டுவருவோம் என பிரமிட் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

    இதுதவிர, சாய்மிராவின் தொலைக்காட்சிப் பிரிவை தனியாகப் பிரித்து புதிய நிறுவனத்தை உருவாக்கப் போகிறார்களாம். இந்தப் புதிய நிறுவனத்தின் வர்த்தக இலக்கு ரூ.300 கோடி என்றும், இந்த நிறுவனமும் செபியில் பட்டியலிடப்படும் என்றும் தெரிகிறது. இந்தப் புதிய நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை பிரமிட் சாய்மிராவின் பழைய பங்குதாரர்களுக்கே தருவார்களாம். மேலும் 40000 பங்குகள் பிரமிட் சாய்மிராவில் நஷ்டமடைந்த பழைய பங்குதாரர்களுக்குத் தரப்படுமாம்.

    தியேட்டர்கள் 750லிருந்து 250 ஆகக் குறைந்தன!

    பிரமிட் சாய்மிரா வசம் முன்பு 750 திரையரங்குகள் இருந்தன. இப்போது அவை 250 ஆகக் குறைந்துவிட்டன. இனி திரையரங்க உரிமையாளர்களுடன் வருமானப் பகிர்வு அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என சாமிநாதன் கூறியுள்ளார்.

    300 தமிழ் திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமைகளை ரூ.700 கோடி கொடுத்துப் பெற்றுள்ளது பிரமிட் சாய்மிரா என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்களின் அமெரிக்க திரையரங்க பிரிவையும், ஃபன் ஏசியா நிறுவனத்தையும் விரைவில் விற்கிறது பிரமிட் சாய்மிரா. ஃபன் ஏசியாவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குகிறது.

    சில தினங்களுக்கு முன்புதான் ஸ்பைஸ் மற்றும் ஆரோனா டெக்னாலஜிஸ் ஆகிய தனது துணை நிறுவனங்களை இழுத்து மூடியது சாய்மிரா. இதில் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 50 முதல் 60 கோடி ரூபாய்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X