ரஹ்மானின் புதிய முயற்சி!

முன்பு வந்தே மாதரத்தை தன் மந்திர இசையால் இளைஞர்களின் தேசிய கீதமாக்கியவர், இப்போது உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆல்பமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த ஆல்பத்தைத் தயாரிக்கப் போகிறவரும் அவரே.
திருக்குறள் ஒரு அற்புதமான இலக்கியம். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. அதனால்தான் நானும் பிளாஸியும் (பாபா தீம் பாட்டுப் பாடியவர்) இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், எனும் ரஹ்மான், இப்போதே வேலைகளைத் துவங்கிவிட்டார்.
ஏற்கெனவே எக்கோ நிறுவனத்தின் ரங்கசாமி பார்த்தசாரதி திருக்குறளுக்கு இசையமைத்துள்ளார்.
இனி, தமிழ்ப் பாடத்தில் திருக்குறளுக்கு மட்டும் பத்துக்குப் பத்து மதிப்பெண்கள் அப்படியே கிடைத்துவிடும் மாணவர்களுக்கு!!
Comments


Click it and Unblock the Notifications