இயக்குநராகும் ரஜினியின் மூத்த மகள்!

By Staff

Dhanush with Aishwarya
கார்த்தி நடிக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இணை இயக்குநராக பணி புரிந்து கொண்டிருக்கும், ஐஸ்வர்யா தனுஷ், கூடிய விரைவிலேயே டைரக்டர் அவதாரமும் எடுக்கப் போகிறார்.

அவர் இயக்கப்போகும் புதுப் படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கப் போகிறது. அதற்கான வேலையில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

என்ன திடீர்னு, டைரக்ஷன் மேல் காதல்?

"நானும் என் தங்கையும் சின்ன வயதிலிருந்தே அப்பாவின் கடின உழைப்பைப் பார்த்திருக்கிறோம். இந்த உலகுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் இன்ஸ்பிரேஷன் அவர்தான். அதனால் அதே போல் கடுமையாக உழைத்து முன்னேறனும் என்கிற எண்ணம் எங்களுக்கும் இருக்கு.

'ஆயிரத்தில் ஒருவன்' இயக்குநர் செல்வராகவன் மிகவும் கண்டிப்பானவர். தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆயிற்றே என்று தனி சலுகையெல்லாம் கொடுக்க மாட்டார். அவர் நினைத்தது திரையில் வரும் வரை விடமாட்டார். பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். இப்போ என்னோட குரு அவர்தான்.

பல கடினமான விஷயங்களை அருமையா சொல்லிக் கொடுத்திருக்கார். இந்தப் படம் முடிந்த்தும், நானும் ஒரு படம் இயக்கப் போகிறேன். மற்ற விவரங்களைப் பிறகு சொல்கிறேன். பெரிய நிறுவனம் ஒன்று இப்படத்தைத் தயாரிக்கிறது என்பதை மட்டும் இப்போது சொல்லி வைக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா.

உங்க படத்துல ஹீரோ தனுஷ் இல்லையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X