மீண்டும் 'ஆடும்' ராஜு சுந்தரம்!

By Staff

Raju Sundaram with Simran
இயக்கத்தில் கையை சுட்டுக் கொண்ட ராஜு சுந்தரம் மீண்டும் டான்ஸ் மாஸ்டராக பணிக்குத் திரும்பியுள்ளார். இருப்பினும் தமிழை விட இந்திப் படங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப் போகிறாராம்.

இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் இயக்குநராகலாம் என்ற அளவுக்கு கோலிவுட்டில் தாராளமயமாகி விட்டது.

நடிகர்கள் இயக்குகிறார்கள், இயக்குநர்கள் நடிக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் நடிக்கிறார்கள். அதேபோல டான்ஸ் மாஸ்டர்களும் இப்போது இயக்குநர்களாகி வருகின்றனர்.

முதலில் ராகவ லாரன்ஸ் இயக்குநரானார், பின்னர் பிரபு தேவா இயக்குநரானார். அவரைத் தொடர்ந்து அண்ணன் ராஜு சுந்தரமும் இயக்குநரானார்.

இந்த மூன்று பேரில் பிரபு தேவா மட்டுமே வெற்றிகரமான இயக்குநராகவும் மிளிர்ந்து வருகிறார்.

ராஜு சுந்தரத்தின் முதல் படைப்பு அஜீத்தின் ஏகன். ஆனால் இப்படம் ராஜு சுந்தரத்திற்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தரவில்லை. இதனால் கொஞ்சம் போல அப்செட் ஆகியுள்ளார் ராஜு.

இருந்தாலும் மனம் தளர்ந்து விடாமல் கொஞ்ச நாளைக்கு டான்ஸ் மாஸ்டராகவே இருப்போம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளாராம்.

இந்த முடிவைத் தொடர்ந்து முதல் படமாக, பலே பாண்டியா படத்திற்கு நடன இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

அதேசமயம், இந்தியில் அதிக அளவில் மாஸ்டராக பணியாற்ற தீர்மானித்துள்ளாராம் ராஜு சுந்தரம்.

டான்ஸ் மாஸ்டராக திரும்பினாலும் கூட இடையில் ஒரு படத்தை இயக்கும் எண்ணும் சுந்தரம் ஜூனியரிடம் உள்ளதாம்.

ராஜு சுந்தரம் மீண்டும் நடன இயக்குநராக வருவதால், அதிகம் பலனடையப் போவது நடனப் பிரியர்கள்தான். வித்தியாசமான டான்ஸ் மூவ்வென்ட்களுக்குப் பெயர் போனவராச்சே ராஜூ சுந்தரம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X