சூப்பர் ஹீரோ... உள்ளாடையை வெளியில் அணிய விருப்பமில்லை - சல்மான் கிண்டல்
எனக்கு சூப்பர் ஹீரோ கதைகளின் மீது விருப்பமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விரும்பவில்லை என்றார் நடிகர் சல்மான்கான்.
இந்தியில் ஷாரூக்கான் இப்போது தனது ராஒன் படத்துக்கான விளம்பரங்களில் தீவிரமாக உள்ளார். மற்றொரு ஹீரோவான அமீர்கான் தனது அடுத்த படமான ஜூகோமான் படத்துக்கான புரமோஷனில் பிஸியாகிவிட்டார்.
இந்த இரு படங்களுமே சூப்பர் மேன் கதைகள் என்று கூறப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று தனது ரெடி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் சல்மான்கான். நிகழ்ச்சியின் முடிவில், இசைவெளியீட்டு விழா நடந்த ஸ்டுடியோவின் பெண் ஊழியர்களுக்கு தனது ஹீரோயின்கள் அசின் மற்றும் ஜரீன்கான் கைகளால் புடவைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு சூப்பர் மேன் கதைகள் எதிலும் ஆர்வமில்லை. சூப்பர் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு உள்ளாடைகளை வெளியில் அணியவும் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்தான் அதிகம் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை மற்றவர்களை விட நானே சிறந்த ஹீரோ. அதேபோல, பிரபுதேவாவை விட நான் நல்ல டான்ஸர்.
எனக்கும் அசினுக்கும் திருமணம் என்பது வெறும் வதந்தி. விரைவில் திருமணம் பற்றி சொல்வேன்", என்றார்.


Click it and Unblock the Notifications











