நெல்லையில் போட்டி-சீமான் முயற்சிக்கு தோல்வி

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சினிமா டைரக்டர் சீமான் மீது புதுவை, பாளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாளை பொது கூட்டத்தில் பேசியது தொடர்பாக அவர் தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
சீமான் மீது பாளை போலீசார் தொடர்ந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை கோர்ட் அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. ஆனால் புதுவை போலீசார் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் சிறையில் இருந்து சீமான் வெளியே வர முடியவில்லை.
இதனிடையே இயக்குனர் சீமானை ஜாமீனில் எடுத்து நெல்லை தொகுதியில் வேட்பாளராக நிறுத்த மனு தாக்கல் செய்வதற்காக நடவடிக்கையில் அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டினர்.
கடந்த 22ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டனர். ஆனால் சீமான் மீதான மனு விசாரணை முடிவடைந்து ஜாமீனில் விடுதலையாவது தாமதமானது. இதனால் அவர் மனு தாக்கல் செய்ய முடியாமல் போனது என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











