ட்விட்டர்- சசி தரூரை முந்த முயலும் ஷாருக் கான்
டெல்லி: ட்விட்டரின் பின்தொடருவோர் எண்ணிக்கையில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசிதரூரை மிஞ்ச வேண்டும் என்பது தான் பாலிவுட் கிங் ஷாருக் கானின் தற்போதைய லட்சியமாம்.
ட்விட்டர் சமூக வலையமைப்பு சேவையில் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தான் இணைந்தார். அவரின் நண்பர் இயக்குநர் கரண் ஜோகர் மூலம் இந்த வலையமைப்பில் சேர்ந்தார் ஷாருக்கான்.
ட்விட்டருக்குள் நுழைந்த 40 நாட்களுக்கு உள்ளாகவே சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 565 பின்தொடருவோரை (ஃபாளோயர்ஸ்) பெற்று விட்டார்.
ஆனால், வெளியுறவுத் துறை இணை அமைச்சரான சசிதரூர் 6 லட்சத்து 61 ஆயிரத்து 456 பின்தொடருவோரை கொண்டுள்ளார்.
அடுத்த சில மாதங்களில் தான் சசி தரூரை விட அதிக ஃபாளோயர்களை பெற்றுவிடுவேன் என ஷாருக்கான் கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications











