சூர்யாவின் அம்மாவாக சிம்ரன்!!

அந்த சிதம்பர ரகசியத்தை இப்போது நாம் நைஸாக லவட்டிக் கொண்டு வந்து விட்டோம், வாசகர்களுக்காக.
தனது தமிழ் திரையுலக மறுபிரவேசத்தை இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த சிம்ரன் ஒரு வழியாக வாரணம் ஆயிரம் படத்தில் ஆரம்பித்துள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யா நான்கு வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறார். அதில் ஒன்று அப்பா-மகன் பாத்திரம். இதில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர்தான் சிம்ரன்.
சிம்ரன் தவிர இன்னும் மூன்று நாயகிகள் படத்தில் உண்டு. பாலிவுட்டை தனது கிளாமர் புயலால் உருட்டிக் கொண்டிருக்கும் சமீரா ரெட்டி, குத்து ரம்யா என்ற திவ்யா மற்றும் கமலுடன் வேட்டையாடி விளையாடிய கமலினி முகர்ஜி ஆகிய மூவரும் இப்படத்தில் உள்ளனர்.
இவர்களில் சமீரா, திவ்யா தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இனி சிம்ரன், கமலினி ஆகியோருடன் சூர்யா தோன்றும் காட்சிகள் மட்டும்தான் பாக்கி.
தனது தமிழ் திரையுலக மறு பிரவேசத்தை பெரிய நடிகருக்கு ஜோடியாகத்தான் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சிம்ரன் நழுவ விட்ட வாய்ப்புகள் ஏராளம்.
பசுபதிக்கு ஜோடி என்பதாலேயே சூப்பர்ஸ்டாரின் குசேலனைக் கூட மறுத்துவிட்டார். கடைசியில் தனது முதல் கதாநாயகனான சூர்யாவுக்கே அம்மாவாக (ஒருவிதத்தில் ஜோடியும் கூடத்தான்) நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுதான் நேரம் என்பதோ!


Click it and Unblock the Notifications











