ஸ்லம்டாக் ..மேலும் 2 விருதுகள்!

அமெரிக்காவின் திரைப்பட நடிகர்கள் கில்டு விருது வழங்கும் விழாவில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
லாஸ் ஏஞ்செலஸில் உள்ள ஸ்ரைன் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடைபெற்றது.
இந்த விருதினை பாலிவுட் நடிகர்களான அனில் கபூர், இர்பான் கான், இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய நடிகரான தேவ் படேல், புதுமுகம் பரீதா பின்டோ ஆகியோர் இணைந்து பெற்றனர்.
இந்த விருதினை மும்பை சேரி வாசிகளுக்கு சமர்ப்பிப்பதாக அனில் கபூர் தெரிவித்தார்.
இதேபோல, நேற்று நடந்த விழாவில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் கில்டின் விருதும் ஸ்லம்டாக் படத்துக்குக் கிடைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்டியான் கூல்சன், இந்த ஆண்டின் சிறந்த தயாரிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.
Comments
அமெரிக்கா சினிமா பாலிவுட் விருது ஸ்லம்டாக் மில்லியனர் ஹாலிவுட் bollywood cinema sag awards slumdog millionaire


Click it and Unblock the Notifications